08:03:2026 உடல்கள் அடக்கம்
08:03:2026. இன்று இரண்டு ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்து கொடுக்கப்பட்டது மரகதம் வயது 49 இறந்துவிட்டார் இவருடைய கணவர் சிவகுமார் வசம் போதிய வசதி இல்லாத காரணத்தால் உதவி ஆய்வாளர் அவர்கள் சித்தோடு காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்S கமருதின் இறந்தவரின் உடலை பெற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மயானத்தில் 688 whc விக்டோரியா மற்றும் இறந்தவரின் கணவர் சிவக்குமார் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது அதேபோல் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் இறந்து விட்டார்… காவல் ஆய்வாளர் அவர்கள் பவானி காவல் நிலையம் ஈரோடு மாவட்டம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் S கமருதின் இறந்தவரின் உடலைப் பெற்று பெருந்துறை நகராட்சி மயானத்தில் Whc 2103 திலகேஸ்வரி அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்து கொடுக்கப்பட்டது என்று மனிதநேய சேவையில் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை மனிதநேய சேவைக்கு தொடர்பு கொள்ள 7293 280514 திருப்பூர்